வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. இ-மெயில் அனுப்ப தெரிந்தாலே போதும்.. அழைக்கும் சென்னை HCL

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு இ-மெயில் மற்றும் ‛சாட்' செய்ய தெரிந்திருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ‛ஹைபிரிட்' மாடல் பணி என்பதால் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:

hcl-hiring-for-international-non-voice-experience-only-email-and-chat-support-in-chennai

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Non Voice Experience (Email and Chat Support) என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் மூலமாக கஸ்டமர்களின் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பம் செய்து, அதன்பிறகு அறிவிப்பில் உள்ள இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட பிற விவரங்களை அனுப்பி விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். மீதமுள்ள 2 நாட்கள் விடுமுறையாகும். இது ‛ஹைபிரிட்' (Hybrid) மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் சில நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றவும் வாய்ப்பு வழங்கப்படும். இருப்பினும் பணி US Shift முறையிலானது. இதனால் இரவு பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+