நாளை இண்டர்வியூ.. HCL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜுன் 29 (நாளை) காலை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process Fresher என்ற பெயரில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ரோல் என்பது Process Associate - Healthcare Voice என்பதாக இருக்கும்.

hcl-hiring-for-international-voice-process-fresher-walk-on-june-29

இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என்றால் கடைசி செமஸ்டர் மார்க்‌ஷீட் ரிசல்ட் உடன் வர வேண்டும். பிசிஏ, பிடெக், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் என்றால் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் வழங்க தயாராக இருக்க வேண்டும். துல்லியமாக டேட்டா மேனேஜ்மெண்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கஸ்டர் பிரச்சனைகளைதீர்க்க தெரிந்திருக்க வேண்டும். சீனியர் சப்போர்ட் டீம்ஸ் உடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

இது Fresher-க்கான பணியாகும். இதனால் முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து நாளை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இதற்கான இண்டர்வியூ ஜுலை 29 (நாளை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech - Tower 4, Special Economic Zone, Elcot - SeZ, Medavakkam High Road, Sholinganallur, Chennai 6000 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+