வாரம் 2 நாள் விடுமுறை.. அனுபவம் தேவையில்லை.. HCLலில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (அக்டோபர் 29) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 29) ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணி அனுபவம் தேவையில்லை. தேர்வாகும் நபர்கள் நாவலூர் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவுக்கு தயாராகலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது International Voice Fresher பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இந்த இண்டர்வியூவில் பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களும் பங்கேற்கலாம். பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவுக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் பணி என்பது நைட் ஷிப்ட்டாக இருக்கும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். 2 நாட்கள் விடுமுறையாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 29) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 30) என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, ETA 3: Block 1, Sandhya Infocity, OMR, Navalur, Chennai - 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். கையில் 2 ரெஸ்யூம், ஆதார், பான் அல்லது டிரைவிங் லைசென்ஸ் என்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications