Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் 13ம் தேதி மதுரையில் இண்டர்வியூ + வேலை.. எச்சிஎல் நிறுவனம் சூப்பர் வாய்ப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து டிசம்பர் 13ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

it jobs jobs hcl it jobs madurai it jobs

இதுதவிர பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மதுரை நிறுவனத்தில் தான் தற்போது சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் (Service Desk Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கண்டிப்பாக டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 8 ஆண்டு வரையிலான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதன்படி ஐடி சர்வீ் டெஸ்க் டிக்கெட்டிங், நெட்வொர்க்/ஹார்ட்வேர்/சாப்ட்வேர் டிரபிள்சூட்டிங், வாய்ஸ்/சாட் சப்போர்ட், ஐடி பேக் ஆபிஸ் ஆபரேஷன்ஸ், டிஏடி/எஸ்எல்ஏ மற்றும் கிளைன்ட் மேனேஸ்மென்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ், சர்வீஸ் நவம் அல்லது பிற டிக்கெட்டிங்கிங் டூலில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு Freshrs ஆக இருப்போர் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்ன்ஷிப் செய்திருந்தாலும் அது அனுபவமாக எடுத்து கொள்ளப்படாது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரையை எடுத்து கொண்டால் விமான நிலையம் - மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் இடையன்குளத்தில் எச்சிஎல் அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்குள் செல்வோருக்கு மட்டுமே இண்டர்வியூவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். அதன்பிறகு வருவோருக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது மதுரை ஏர்போர்ட் - மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் உள்ள எல்காட் ஐடி பார்க்கில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்வோர் Resume, ஆதார் கார்டு கட்டாயம் வை்ததிருக்க வேண்டும். பென்டிரைவர், லேப்டாப் எடுத்து வர அனுமதியில்லை. அதேபோல் கடந்த 3 மாதத்தில் எச்சிஎல் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதில் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி என்பது 24X7 என்ற அடிப்படையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட .ள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+