"வொர்க் ஃப்ரம் ஹோம்".. அலுவலகம் செல்ல வேண்டாம்.. அழைக்கும் HCL நிறுவனம்! சூப்பர் சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும்விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவை தலைமையிடமாக கொண்டு பல வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவனம் எச்சிஎல். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் என்பது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Work From Home பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Fullstack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணியில் குறைந்தபட்சம் 5 முதல் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு ஜாவா (Java), ஸ்பிரிங்புட் (Springboot), மைக்ரோசர்வீசஸ் (Microservices) உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் எச்சிஎஎம், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட், Angular அல்லது சுமரயா, MySQL Database, API Integrations, REST & Callback, SDLC, CSOD Intergration உள்ளிட்டவற்றிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு Remote வகை வேலையாகும். இதனால் அலுவலகம் செல்லாமல் இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். இருப்பினும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் குறித்த விபரம் வெளியாகும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் பணி அனுபவம், ஜாவா உள்பட மேற்கூறிய பிற பிரிவில் உள்ள பணி அனுபவம் உள்ளிட்டவற்றுடன், நோட்டீஸ் பிரியட், தற்போதைய இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களுடன் [email protected] என்ற முகவரிக்கு Resume-யை அனுப்பி வைக்கலாம்.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications