HCL நிறுவனத்தில் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பு.. ஜுன் 28 ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஜூன் 28 (நாளை மறுநாள்) பெங்களூரில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் (Mechanical Design Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

hcl-hiring-for-mechanical-design-engineer-role-interview-to-be-helad-on-june-28-in-bangalore

இந்த பணிக்கு பிஇ, பிடெக்-கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்இ, எம்டெக் ஆகியவற்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோல் பணியை பெற விரும்புவோர் GD & T, Root Cause Analysis அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் UG/NX, AutoCAD, Oracle BOM or Oracle ECO தெரிந்திருக்க வேண்டும். ANSYS & CFD ACE + /Fluent அட்வான்ஸ் அறிவை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் செமிகண்டக்டர், மெடிக்கல், ஏரோஸ்பேஸ் டொமைன் உள்ளிட்டவற்றில் புராடெக்ட் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூமை முதலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 28 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, 8th Floor Cafeteria, Unit - B, Itpl Aviator Building, Whitefield Road, SEZ, Bengaluru, Karnataka 560066 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+