HCL IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் (HCL IT Jobs) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரம் வருமாறு:
எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் ஓடிசி ஏஆர் கலெக்சன் (OTC AR Collections) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பிகாம் – எம்பிஏ
இந்த பணியை விரும்புவோர் பைனான்ஸ் பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பிகாம், எம்பிஏ (பைனான்ஸ்) முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மீட்டிங் டார்க்கெட், எஸ்எல்ஏ, எம்ஆர் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் எவ்வளவு?
நெகோஷியேஷன் திறமை இருப்பதோடு, புராஜெக்ட் மெத்தடாலஜி அனுபவம் இருக்க வேண்டும். அதேபால் அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராகவும், தனியாகவும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மாத சம்பளம் எவ்வளவு?
தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். நைட்ஷிப்ட் உண்டு. இதனால் அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
நாளை இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (மார்ச் 6) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ ETA 1 - HCL Navalur Block 1, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu, 600130 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
சென்னையில் பணி
இண்டர்வியூ செல்வோர் Resume, ஆதார், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்து செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications