டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. சென்னையில் ஜனவரி 27ல் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்
சென்னை: டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு எச்சிஎல் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு: எச்சிஎல் நிறுவனத்தில் ஓடிசி (OTC), பில்லிங் (Billing), ஆர்டர் மேனேஜ்மென்ட் (Order Management) (பர்சேஸ் ஆர்டர் (Purchase Order) மற்றும் சேல்ஸ் ஆர்டர் (Sales Order) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒருபிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு ஓடிசி, ஆர்டர் மேனேஜ்மென்ட்/இன்வா்ஸ் பில்லிங், கஸ்டமர் மற்றும் கிளைன்ட் ஹேண்ட்லிங், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
இல்லாவிட்டால் மேற்கூறிய பிரிவில் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ என்பது நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Navalur Campus, Special Economic Zone, ETA 3, Chennai - 603103 என்ற முகவரிக்கு சென்று பங்கேற்கலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவுக்கு தேவையான ஆவணங்களுடன் ஜனவரி 27 ம் தேதி மேற்கூறிய முகவரிக்கு சென்று நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications