HCL வேலைவாய்ப்பு.. சென்னையில் காத்திருக்கும் ஐடி வேலை.. நவம்பர் 4 - 5 ம் தேதிகளில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறுிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் நவம்பர் 4 - 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். இந்த நிறுவனம் தமிழரான ஷிவ் நாடாருக்கு சொந்தமானது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் QA (Back Office) in BFS Domain பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது டெக்னிக்கல் க்யூஏ ரோல் இல்லை. பேங்கிங் மற்றும் பைனான்சியல் சர்வீஸ் செக்டாருக்கான Non Technical ரோலாகும். விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 8 ஆண்டு வரை QA role in BFS Domain என்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் பிபிஐ அனுபவம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல அனலிட்டிக்கல் மற்றும் இன்டர்பிடெஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டிசிசன் மேக்கிங், Email Etiquettes, ரிப்போர்ட்டிங் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படலாம். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற வேண்டி இருக்கும்.
தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.அதோடு அவர்கள் அலுவலகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். Cab வசதி செய்து தரப்படும். அலுவலகம் சார்பில் வீட்டுக்கே வாகனம்வந்து பணிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டில் டிராப் செய்யும் வசதி உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு நவம்பர் 4 - 5ம் தேதிகளில் காலை 12.30 மணி முதல் மதியம் 3 மணிவரை நடக்கும சென்னை நாவலூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ என்பது HCL - ETA 1- Village and Panchayat, ETA- Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.. இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு வைத்திருப்பது நல்லது. அதோடு கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்வது அவசியமாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications