IT Jobs: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி இண்டர்வியூ.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

hcl-hiring-for-senior-customer-support-representative-roles-and-interview-on-august-24

சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது கஸ்டமர் சர்வீஸ் ரெப்ரெஸ்சென்டேட்டிவ் (Customer Service Representative or CSR - Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். விண்ணப்பம் செய்வோர் கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டரில் அடிப்படை விஷயங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மல்டிபிள் சிஸ்டம் நேவிகேட் செய் தெரிந்தருக்க வேண்டும். ஆர்கனைசேஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். இந்த பணிக்கு இன்பவுண்ட்- அவுட்பவுண்ட் கஸ்டமர் கால் ஹேண்ட்டில் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக பிபிஓ பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட்டிற்கு தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 3, Sandhya Infocity - Navalur, No.3, Rajiv Gandhi Salai, Old Mahabalipuram Road, Navalur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+