Senior Java Developer வேலைவாய்ப்பு.. அழைக்கும் HCL.. அக்டோபர் 25ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் சீனியர் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் பணி பற்றி இங்கு பார்க்கலாம்.

hcl-hiring-for-senior-java-developer-role-at-navalur-in-chennai-and-interview-to-be-held-on-october

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது சீனியர் ஜாவா டெவலப்பர் (Senior Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா ஃபுல் ஸ்டாக் - ஆங்குலர்/ரியாக்ட், ஜாவா ஸ்பிரிங்புட் + ஏடபிள்யூஎஸ்/ஜிசிபி, ஜாவா ஸ்பிரிங்க் புட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் ஜாவா, ஸ்பிரிங்புட் மற்றும் மைக்ரோசர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா ஃபுல் ஸ்டாக் அல்லது Angular js or Reactjs தெரிந்திருக்க வேண்டும். ஜாவா உடன் ஏடபிள்யூஎஸ்/ஜிசிபி கிளவுட் டெக்னாலஜி தெரிந்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இண்டர்வியூ என்பது Walk in முறையில் தான் நடக்கும். Virtual முறையில் கிடையாது. இண்டர்வியூ Panel Interview, Second Level Panel Interview முறையில் நடக்கும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழியாக விண்ணப்பம் செய்த பிறகு ரெஸ்யூமை [email protected] க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவுக்கு செல்வோர் முன்கூட்டியே அக்டோபர் 25ம் தேதி நாவலூர் எச்சிஎல் அவுலகத்துக்கு செல்ல வேண்டும். இப்போது சென்னையில் இண்டர்வியூ நடைபெறுவது போல் எதிர்வரும் வாரங்களில் பெங்களூர், புனே உள்ளிட்ட நகரங்களில் வைத்தும் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+