2 பிரிவுகளில் காலியிடங்கள்.. சென்னையில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. HCL ஐடி நிறுவனத்தில் வேலை
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் டீம் லீட் மற்றும் சீனியர் டீம் லீட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு நாளை (அக்டோபர்) 15 முதல் நாளை மறுநாள் (அக்டோபர் 16)ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான், எச்சிஎல் நிறுவனத்தில் டீம் லீட் மற்றும் சீனியர் டீம் லீட் (Team Lead and Senior Team Lead) பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேவேளையில் ஹெல்த்ஹேர் ஆர்சிஎம்-மில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டீம் லீடராக 1 முதல் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் டீம் ஹேண்டிலிங்கில் 1 முதல் 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். மொத்தமாக பார்த்தால் 4 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணியை பெற விரும்புவோருக்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் (Exce and PPT Preferred) தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கஸ்டமர்களிடம் பாசிட்டிவாக பேசும் தன்மை இருக்க வேண்டும். டீம் பிளேயராக புணியாற்றி இருக்க வேண்டும். புராசஸ் இம்ப்ரூவ்மென்ட் ஐடியா மற்றும் அதனை செயல்படுத்தும் திறமை இருக்க வேண்டும்.அதேபோல் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை (அக்டோபர் 15) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No.602/3/138, Special Economic Zone, Elcot - Se, Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். பணி US Shift முறையில் இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications