நாளை காலையில் இண்டர்வியூ.. சென்னை எச்சிஎல் நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ நாளை காலை 9.30 மணிக்கு சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் சீனியர் கஸ்டமர் சப்போர்ட் (வாய்ஸ்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இதுதவிர சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
முதலில் நார்மலாக பேசினாலும் கூட அமெரிக்காவின் பேச்சுவழக்கை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கஸ்டமர்களை அடிப்படையாக கொண்டு செயல்பட தயாராக இருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறன் இருப்பதோட, டைப்பிங் ஸ்கில்ஸ் மற்றும் டேட்டா என்ட்ரி திறமை இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
டீமாகவும், தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். தற்போது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் என்றால் கட்டாயமாக Relieving கடிதம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இரவு பணி இருக்கும் என்பதால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜுலை 6) காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech, Tower 4, ELCOT Special Economic Zone (SEZ), 602/3 & 138, Sholinganallur - Medavakkam High Road, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை காலையில் மேற்கண்ட முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications