மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் 4 பிரிவுகளில் வேலைவாய்ப்பு.. ஆகஸ்ட் 1ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் டெஸ்ட்டிங்கில் 4 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

எச்சிஎல் நிறுவனத்தில் டெஸ்ட்டிங் ப்ரோபஷனல் (Testing Professionals) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, Playwright Testing, ETL Testing, Tosca Testing, Performance Testing உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HCL

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4.5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். Agile Methodologies தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாக அமையும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதோடு, கோலாபரேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது முகவரி, இண்டர்வியூ நேரம் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படும். இண்டர்வியூ Face To Face முறையில் நடக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+