Arts & Science-ல் டிகிரி போதும்.. Freshers-களுக்கு சூப்பர் சான்ஸ்! சென்னை HCL-லில் நாளை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனம் சார்பில் Arts and Science பிரிவில் டிகிரி முடித்த Freshers-களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 30) வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளைய இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து எச்சிஎல் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it jobs jobs

அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனம் சார்பில் HCL Tech mega Walkin Drive for Freshers என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Customer Support Representative (Email Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான இண்டர்வியூவில் Arts & Science பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் பங்கேற்கலாம். மாறாக பிடெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக் படிப்பை படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு Customer Support Experience அல்லது Client Service Experience இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் UK Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்கும் திறன், தனியாக பணியாற்றும் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Competitive Salary என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இதற்கான இண்டர்வியூ நேற்று முதல் தொடங்கியது. நாளை வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. நாளைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ No 33, Block 2, ETA 3, Sandhya Infocity, OmR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600130 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+