டிகிரி மட்டுமே போதும்.. எச்சிஎல் நிறுவனம் தரும் சூப்பர் வேலை.. நாளை முதல் மார்ச் 26 வரை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் நாளை முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ளது. எச்சிஎல் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஹெல்த்ஹேர் வாய்ஸ் பிரஷர்ஸ்(Freshers (Healthcare Voice)) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

hcl-mega-walk-in-drive-for-freshers-healthcare-voice-held-in-march-24-at-sholinganallur-in-chennai

அதன்படி 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது US முறையில் இருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிகடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது வழங்கப்படும். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. ஆனால் அதற்கு தனியாக கட்டணம் என்பது செலுத்த வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (மார்ச் 24) ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TECH, Sholinganallur ELCOT campus, Tower 4, Chennai-119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+