அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. அனுபவம் வேண்டாம்.. சென்னை HCL-லில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ
சென்னை: Process Associate பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை (செப்டம்பர் 26) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 27) ஆகிய 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களும், ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது Voice Process (Banking Domain) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பின்வருமாறு: வாய்ஸ் புராசஸ் பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதன்படி பார்த்தால் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் படித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருப்பவர்களும், கடைசி செமஸ்டர் ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இந்த குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்களும், பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் ஓராண்டு அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்கள் அனுபவ சான்று வைத்திருக்க வேண்டும்.
அனுபவம் இல்லாதவர்கள் என்றால் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். Interpersonal Skills இருக்க வேண்டும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட் ஷிப்ட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் Inbound மற்றும் Outbound கால்ஸில் பேச ரெடியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும். அலுவலகத்தில் இருந்து பிக்அப் மற்றும் டிராப்புக்கு Cab வசதி வழங்கப்படும். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 26 (நாளை) மற்றும் செப்டம்பர் 27 (நாளை மறுநாள்) ஆகிய தினங்களளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications