பிஇ - பிடெக் -எம்சிஏ - எம்எஸ்சி முடித்தோருக்கு வேலை.. அழைக்கும் HCL.. நவ.1ல் பெங்களூரில் இண்டர்வியூ
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 1ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து நவம்பர் 1ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 60க்கும் அதிகமான நாடுகளில் மொத்தம் 2.20 லட்சம் ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது டெலிகாம் கஸ்டமர் சக்சஸ் மேனேஜர் (Telecom Success Manager or T-CSM) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி என்பது அசோசியேட் மேனேஜர் - ஜிஎஸ்சி குளோபல் சக்சஸ் டீம் (GST) என்ற அடிப்படையில் இருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெலிகாம் டொமைனில் கஸ்டமர் சக்சஸ், ஆபரேஷன் எக்ஸலன்ஸ் மற்றும் அக்கவுண்ட் குரோத் உள்ளிட்டவற்றின் Strategic லீடர்ஷிப் முறையில் இருக்கும். அதன்படி பிடெக், பிஇ அல்லது எம்பிஏ, எம்எஸ்சி (ஐடி), எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக அனைவரும் டெலிகாம் அல்லது நெட்வொர்க்கிங் டொமைனில் அனுபவம் கொண்டிருப்பதோடு, ஐடிபிஎல் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஸ்டாக்ஹொல்டர் கம்யூனிகேஷன், பிரசென்டேஷன் மற்றும் நெகோஷியேஷன் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் 8th floor, Unit - B, ITPL Aviator Building, Whitefield Main Road, SE, Bengaluru, Karnataka 560 066 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவுக்கு தேவையான சான்றிதழ்களுடன் செல்லலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications