நாளை காலை சென்னையில் இண்டர்வியூ.. HCL அலுவலகத்தில் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

hcl-mega-walk-in-drive-fresher-voice-process-roles-on-august-10

அதன்படி எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 2024 முதல் 2026ம் ஆண்டுக்குள் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அதேவேளையில் பிடெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ, பிஇ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில், சாட் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 10) காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. HCL Technologies Ltd, ETA 1, Sandhiya Infocity Near Vivara Mall, Navallur என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+