Excel தெரியுமா? அழைக்கும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் MIS Skillset-க்கான Mega Walkin Drive நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் எக்ஸலில் (Microsoft Excel) நன்கு தெரிந்திருப்பதோடு அதில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Pivot Tables, VLOOKUP
அதேபோல் Intermediate in PowerBI, விபிஏ/மேக்ரோ (VBA/Macro) நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருப்பதோடு, நன்கு எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Resume மற்றும் ஐடி ப்ரூப் அப்டேட் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கான இண்டர்வியூ என்பது நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 24 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HCL Technologies Ltd. ETA 3- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரியில் நடைபெறும் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications