HCL வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம்.. நாளை சென்னையில் இண்டர்வியூ.. நல்ல சான்ஸ்
சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஆகஸ்ட் 30) காலை 11 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக உரிய ஆவணங்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்றை மற்றும் காப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் எச்சிஎல் நிறுவனத்துக்கு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் தொடர்ந்து பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மீண்டும் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து பதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜர் (Associate Manager) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு Customer Service & Sales Support - Retail / BPO/ Order Mangement உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பிரிவில் குறைந்தபட்சம் 5 முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் நேரடியாக நடக்கும் இண்டவியூவில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இண்டர்வியூ என்பது நாளை (ஆகஸ்ட் 30ம் தேதி) சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தின் கேட் 1, டவர் 4-ல் அலுவலகத்தில் வைத்து காலை 11 மணிக்கு நேரடி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்வோர் முன்கூட்டியே உரிய ஆவணங்களுடன் செல்வது நல்லது. இதன்மூலம கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளமாக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் நைட்ஷிப்ட்டில் பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும். இதுதவிர எச்சிஎல் சார்பில் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி (Chargeable) வசதி உள்ளது. இதனால் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் Cab-ல் சென்று வர முடியும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications