அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை.. அனுபவமும் வேண்டாம்.. HCL-லில் செப்., 23ல் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு செப்டம்பர் 23ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணி என்பது பேங்கிங் டொமைனில் வாய்ஸ் புராசஸ் என்ற முறையில் இருக்கும்.

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இளநிலை, முதுநிலை படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ, பிஏ உள்பட பிற பிரிவுகளில் இளநிலை படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மதுநிலை படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாறாக பிஇ, பிடெக், எம்டெக்,எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் Inbound - Out Bound Calls-க்கு தயாராக இருக்க வேண்டும். எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் வேலை செய்ய தயராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
அலுவலகத்தில் இருந்து Cab வசதி செய்து தரப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்களை வைத்து பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 23 ம் தேதி காலை 11 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்விவியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8 , Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டும். ரெஸ்யூம் உள்பட இண்டர்வியூவுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். முன்அனுபவம் இருக்கும் நபர்கள் என்றால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications