HCL வேலைவாய்ப்பு.. சென்னையில் நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 7 ), நாளை மறுநாள் (அக்டோபர் 8) ஆகிய 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:
சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் Catalogue Manager பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் Sourcing மற்றும் Procurement Operations Process தெரிந்திருக்க வேண்டும
ஆங்கிலத்தில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அதோடு எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இது US Shift அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது இதுபற்றி தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூ என்பது நாளை (அக்டோபர் 7), நாளை மறுநாள் (அக்டோபர் 8) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணியை விரும்புவோர் HCL Tech, Tower 4, 602/3 ECR Link Road, Near Automotive Robotics India Pvt Ltd., Shollinganallur, Chennai, Tamil Nadu - 600 097 என்ற முகவரியில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications