டைப்பிங் தெரியுமா? சென்னை HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. இன்று முதல் அக்டோபர் 9 வரை இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து டைப்பிங் தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று முதல் அக்டோபர் 9 ம் தேதி வரை சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. டிகிரி முடித்து டைப்பிங் செய்ய தெரிந்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்லாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கலை, அறிவியல், காமர்ஸ், பிசினஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் என 90 சதவீத Accuracy-யில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக மதியம் 3 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வேலை என்பது இருக்கும். ஆனாலும் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது இதுபற்றி தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது இன்று (செப்டம்பர் 30) ம் தேதி தொடங்கி அக்டோபர் 9 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த பணியை விரும்புவோர் HCL Tech, ElCOT - SEZ Unit-I Special Economic Zone 602/3, Shollinganallur Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications