டிகிரி போதும்.. சென்னை அம்பத்தூரில் வேலை.. HCL தரும் சூப்பர் சான்ஸ்.. இன்றும், நாளையும் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process for Banking Sector பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். அதாவது Process Associate பணியாகும்.
இந்த பணிக்கான கல்வி தகுதி என்று பார்த்தால் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்ய வேண்டாம். மற்றபடி முதுநிலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை Voice Process பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரோட்டேஷனல் ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி இருக்கும். பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று (மே 5) மற்றும் நாளை (மே 6) என 2 நாட்கள் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த 2 நாட்களும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் Special Economic Zone, Elcot - Sez, Medavakkam High Road, Sholinganllur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அம்பத்தூரை எடுத்து கொண்டால் HCL Technologies - AMb 6, South Phase, Ambattur Industrial Estate 8, madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரியில் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications