"டிகிரி போதும் - அனுபவம் வேண்டாம்".. நாளைய இண்டர்வியூக்கு அழைக்கும் HCL.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் டிகிரி முடித்து முன்அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (அக்டோபர் 10) காலையில் சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்களுக்கு சென்னையில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தற்போது நாளை நேரடியாக இண்டர்வியூ நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Freshers International Non Voice & Semi Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் எதுவும் இருக்க கூடாது. ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இதில் நைட் ஷிப்ட்டும் அடங்கும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி (Chargeable) வசதி உள்ளது. அதேபோல் இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பில் சம்பளம் குறித்த ‛பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான இண்டவிர்வியூ என்பது நாளை (அக்டோபர் 10) காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL TECH, Tower 4, Sholingalnallur Elcot Campus, Chennai 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இது Face To Face இண்டர்வியூவாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள எச்சிஎல் நிறுவனத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு வைத்திருப்பது நல்லது. அதோடு கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்வது அவசியமாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+