வாரம் 2 நாள் விடுமுறை.. அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை உறுதி.. சென்னை HCL-லில் நாளை இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (நவம்பர் 10) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்களும், அரியர்ஸ் உள்ளவர்களும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட் (பேங்கிங் வாய்ஸ் ஓபனிங்) (Process Associate - Banking Voice Opening) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முன்அனுபவம் இல்லாதவர்களும், ஓராண்டு வரை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அனுபவம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லதுபட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் போதும். அதேபோல் அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். பட்ட மேற்படிப்பை பொறுத்தமட்டில் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 10) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் லேப்டாப் எடுத்து செல்ல கூடாது. இண்டர்வியூ HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட்டில் பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications