அக்டோபர் 28 - 29 ல் இண்டர்வியூ.. எச்சிஎல் நிறுவனத்தில் Non Technical Role.. சென்னையில் பணி
சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து Not Technical Role-ல் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் சென்னையில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதிகள் என்னென்ன? என்று இங்கே பார்க்கலாம்.

சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் QA (Back Office) in BFS Domain பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது டெக்னிக்கல் ரோல் இல்லை. Non Technical ரோலாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஃஎப்எஸ் டொமைனில் QA ரோலில் 3 முதல் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதில் இன்சூரன்ஸ், பிபிஐ பணி அனுபவம் கொண்டவர்கள் கணக்கில் சேர்த்து கொள்ளப்படமாட்டார்கள். அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு முடிவெடுக்கும் திறமை, Email Etiquettes, ரிப்போர்ட்டிங் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி அனலிட்டிக்கல் மற்றும் இன்டர்பிரிடேஷன் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் அமெரிக்கா/பிரிட்டன் (US/UK) ஷிப்ட் அடிப்படையில் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL - ETA 1- Village and Panchayat, ETA- Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதிவு செய்து அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29ல் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications