+2 போதும்.. அசத்தல் சம்பளம் + சென்னையில் பணி.. HCL தரும் சூப்பர் ஆஃபர்.. ஆகஸ்ட் 26, 27ல் இண்டர்வியூ
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது ஆகஸ்ட் 26 மற்றும் 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பல இடங்களில் எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நம் நாட்டில் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எச்சிஎல் நிறுவனத்துக்கு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் தற்போதுகஸ்டமர் சப்போர்ட் ரோல் பிரிவில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி International Voice Freshers for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
ZOHO-வின் புதிய வேலைவாய்ப்பு.. அக்கவுண்ட் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரெடியா? சென்னையில் பணி
பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக பேங்கிங், இன்டர்நேஷனல் பேங்கிங் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மேலும் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் Client-க்கு வாய்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் பதிலளித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பதாரர்கள் பணிக்கு செலக்ட் ஆகும் பட்சத்தில் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து நிறுவனத்துக்கு பிக்அப்-டிராப் வசதி இந்த Cab மூலம் அளிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
TCS வேலைவாய்ப்பு.. பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்போருக்கு குட்நியூஸ்.. செப்டம்பர் 11ம் தேதி கடைசி நாள்
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது இந்த 2 நாட்களிலும் மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். வாரம் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு, கல்வி சான்றிதழ் உள்பட தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.
இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. அங்குள்ள HCL ETA-1 - Villagae and Panchayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Chegalpattu, Tamil nadu 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் உள்ள இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications