ZOHO-வின் புதிய வேலைவாய்ப்பு.. அக்கவுண்ட் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரெடியா? சென்னையில் பணி
சென்னை: தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் அக்கவுண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் இயங்கும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஜோஹோவும் ஒன்று. சென்னை, மதுரை, சேலம், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணி செய்வது என்பது பலருக்கும் கனவாக உள்ளது.

இதனை நிறைவேற்றும் வகையில் தான் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ஜோஹோ நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் (Account Managers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதி என்று பிரத்யேகமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் கூட பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 2 முதல் 7 ஆண்டு வரை பணிஅனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ZOHO-வின் அடுத்த வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21ம் தேதி கடைசி நாள்! சென்னையிலேயே பணி
மேலும் அக்கவுண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் வாடிக்கையாளரை எதிர்கொண்ட பணியில் அனுபவம் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் திறமை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும். மேலும் சிஆர்எம் (CMR)ல் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை பதிவு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
TCS வேலைவாய்ப்பு.. பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்போருக்கு குட்நியூஸ்.. செப்டம்பர் 11ம் தேதி கடைசி நாள்
தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதுமட்டுமின்றி சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications