ZOHO-வின் அடுத்த வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21ம் தேதி கடைசி நாள்! சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. தற்போது ஜோஹோ நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it jobs job jobs

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னை, மதுரை, தென்காசியில் உள்ள ஜோஹோவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்துக்கான ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்வி தகுதி என்று பிரத்யேகமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் டிகிரி, இன்ஜினியரிங் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இருப்பினும் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில தகுதிகள் உள்ளன. அதாவது விண்ணப்பத்தாரர்கள் தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த கஸ்டமர்களுடன் போனில் பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய டெக்னாலஜிஸ் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வாய்ஸ், இ-மெயில் மற்றும் சாட் முறையில் டெக்னிக்கல் சப்போர்ட் வழங்க வேண்டியிருக்கும். மேலும் ஆன்லைன் டெமோ மற்றும் கஸ்டமர் டிரெய்னிங் செய்ய வேண்டும். கேதரிங் மற்றுமு் அனலிஸ் இருக்கும்.

இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை தவிர பிற இடங்களிலும், நைட் ஷிப்ட்டிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பம் செய்வோருக்கு தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும்.

it jobs job jobs

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியாகும். இன்னும் 6 நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளதால் தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்ட இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+