HCL வேலைவாய்ப்பு.. செப்டம்பர் 6ல் ஆன்லைனில் இண்டர்வியூ.. சென்னை உள்பட 3 இடங்களில் நியமனம்
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து செப்டம்பர் 6ம் தேதி ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் (Java AWS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பதாரர்களுக்கு ஜாவா 8+, ஸ்பிரிங் புட் (Spring Boot), RESTful APIs பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் AWS Services (Lambda, S3, DynamoDB, EC2 etc) தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர Docker, Kubernetes-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ECS என்பது பிளஸ் பாயிண்ட்டாகும். DevOps பிராக்டீசஸ் மற்றும் CI/CD பைப்லைன்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
மேலும் SQL/NoSQL Databases உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பம் செய்வோர் மேற்கூறிய பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்து செப்டம்பர் 6ம் தேதி நடக்கும் ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications