HCL வேலைவாய்ப்பு.. டிகிரி மட்டுமே போதும்! இன்று, நாளை, ஆக.,16ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியை விரும்புவோர் நேரடியாக இன்று, நாளை மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் நடக்கும் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.
தமிழகத்தில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:
தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Voice Freshers for Banking Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கண்டிப்பாக பேங்கிங், இன்டர்நேஷனல் பேங்கிங் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நேற்று முதல் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இன்று (ஆகஸ்ட் 13), நாளை (ஆகஸ்ட் 14) மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்று இண்டர்வியூ என்பது இல்லை.
இண்டர்வியூ என்பது HCL - ETA 1- Village and pachayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, navallur Taluk, Chengalpattu, Tamil Nadu - 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்லும்போது Resume, ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு ஐடி கார்டு வைத்திருக்க வேண்டும். மேலும் கல்வி சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications