அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்தாலே எச்சிஎல் தரும் வேலை.. சென்னையில் பணி.. செப்.,19ல் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு செப்டம்பர் 19ம் தேதி (நாளை) இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஆர்ஸ்ட் மற்றும் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்து அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பின்வருமாறு: வாய்ஸ் புராசஸ் பணியை விரும்புவோர் கல்லூரியில் ஆர்ஸ்ட் மற்றும் சயின்ஸ் பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.
பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ, பிஏ என்று எந்த படிப்பை முடித்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். அதேபோல் பணி அனுபவம் வேண்டாம். சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டிபிள் டாஸ்க், பிரச்சனையை தீர்க்கும் திறன், தனியாக பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். அதேபோல் கஸ்டமர் சப்போர்ட் அனுபவம் அல்லது கிளைண்ட் சர்வீஸ் ரிபிரசென்ட்டெட்டிவ் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 19 (நாளை) காலை 10.30 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 33, Block 2, ETA 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications