நாளை இண்டர்வியூ.. மதுரை HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. யாருக்கெல்லாம் வாய்ப்பு தெரியுமா?
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர்/சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மதுரையில் அக்டோபர் 26ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் அக்டோபர் 26ம் தேதி (நாளை) இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணி பற்றிய விபரம் வருமாறு:
மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர்/சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து 6 முதல் 24 மாதங்கள் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இன்டர்ன்ஷிப் மேற்கொண்டது அனுபவத்தில் சேர்த்து கொள்ளப்படாது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 26ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்வோர் HCL Technologies Ltd (Near Pandi Kovil), Elcot, IT SEZ, Plot No.5 & 7, Ilanthaikulam Village, Madurai - 625020 என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
இண்டர்வியூ என்பது 2 கட்டங்களாக நடக்கும். முதல் ரவுண்ட் என்பது ஆன்லைன் டெக்னிக்கல் அசஸ்மென்ட்டாக(Hackerrank) இருக்கும். 2வது ரவுண்ட் என்பது Managerial மற்றும் டெக்னிக்கல் டிஸ்கஸன் என்ற அடிப்படையில் இருக்கும். இண்டர்வியூவுக்கு செல்வோர் தங்களின் போட்டோவுடன் கூடிய ரெஸ்யூம், 10, 12, டிகிரி உள்பட முதுகலை படிப்புக்கான கல்வி சான்றிதழின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் கொண்டு செல்ல வேண்டும்.
அதேவேளையில் லேப்டாப், பென்டிரைவ் உள்பட ஸ்ட்ரேஸ் கொண்ட சாதனங்களை எச்சிஎல் வளாகத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத, ஆண்டு சம்பளம் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் திறமை, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பதிவு செய்ய Click Here












Click it and Unblock the Notifications