சென்னையில் நாளை இண்டர்வியூ.. பணி அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தாலே போதும்!
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ நாளை நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட இதில் பங்கேற்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் எச்சிஎல் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து Mega Walkin Drive for Freshers என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பில் பணி குறித்த பிரத்யேக ரோல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக கஸ்டமர் சப்போர்ட் ரோல் பணியாக இருக்கலாம். இது Freshers-களுக்கான தனி அறிவிப்பு என்பதால் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛கிரேட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி கட்ட இண்டர்வியூவில் சம்பளம் பற்றி தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு US shifts முறையில் வேலை இருக்கும். இண்டர்வியூ என்பது நாளை (மே 22) காலை 11 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8 Madras Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu 600 058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணியில் சேர்வோருக்கு அலுவலகத்தில் இருந்து 30 கிமீ தொலைவிற்கு Cab வசதி வழங்கப்படும். பெண் பணியாளர்களுக்கு இது இலவசமாகும். இண்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி என்பது வழங்கப்படும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications