நாளை இண்டர்வியூ.. HCL நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்.. சென்னையிலேயே பணி.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 3) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து International Banking Voice Process பிரிவில் 2 செக்சனில் காலியாக உள்ள பணியிடங்கள நிரப்பப்பட உள்ளது. அதன்படி அசோசியேட் (Associate) மற்றும் சீனியர் டீம் லீட் (Senior Team Lead)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

hcl-tech-walk-in-drive-for-international-banking-voice-process-role-and-interview-on-october-3

அதன்படி அசோசியேட் பணியை விரும்புவோர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Inbound calling இருக்கும். சேல்ஸ் மற்றும் அப்செல்லிங் அல்லது கிராஸ் செல்லிங் கிடையாது.

இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் மல்டிடாஸ்க்கிங் பணி செய்ய தெரிந்திருப்பதோடு, தனிஆளாக நின்று பணி செய்ய வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் சீனியர் டீம் லீட் (Senior Team Lead) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் என்விரான்மென்ட் அல்லது வாய்ஸ் ப்ராசஸ் பிரிவில் குறைந்தபட்சம் 3 - 4 ஆண்டுகள் வரை டீம் லீட் அல்லது சூப்பர்வைசரி ரோலில் பணியாற்றி இருக்க வேண்டும். ஸ்ட்ராங் லீடர்ஷிப் மற்றுமு் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இருபணிகளுக்குமான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 3ம் தேதி (நாளை) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMb 6, South Phase, Ambattur Industrila Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, chennai, Tamil Nadu 600 076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு வைத்து தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+