அனுபவம் வேண்டாம்.. B.sc, B.com. BCA, BBA படித்தோருக்கு HCL-ல் வேலை.. அக்., 6ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அக்டோபர் 6ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Process Associate/Associate (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 0-1 ஆண்டு வரை பிபிஓவில் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் ரிலிவிங் அல்லது ராஜினாமா ஏற்பு கடிதத்தை வைத்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் என்றால் 2024 மற்றும் 2025ம் ஆண்டில் பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் என்பது இருக்க கூடாது.
அதேபோல் எம்எஸ் ஆபிசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக Excel தெரிய வேண்டும். VLOOKUP Pivot, Tables உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். டாக்குமென்டேஷன் ஸ்கில்ஸ இருக்க வேண்டும். டேட்டா அக்குரசி, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.
மல்டிபிள் டாஸ்க் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கோ-ஆடினேஷன் மற்றும் பாஃலோஅப் ஸ்கில் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
அதேபோல் பணி முறை US Shift ஆகும். இதனால் இரவு பணி பார்க்க தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Tower 4, Elcot SeZ, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications