டிகிரி போதும்.. எச்சிஎல்-லில் அசத்தலான வேலை.. அக்டோபர் 6- 7 ல் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து ஏஆர் காலர்ஸ் (AR Callers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 7 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது AR Callers பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் (இன்பவுண்ட்/அவுட்பவுண்ட்) அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.

இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும். கவனிக்கும் திறமை இருக்க வேண்டும் என்பதோடு, டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்க்கிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். டீம் பிளேயராகவும், தனியாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணி US Shift Timing முறையாகும். இதனால் இரவு பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, SEZ Tower 4, 138, 602/3 Medavakkam High road, Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications