அனுபவம் வேண்டாம்.. HCL ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. நாளை + நாளை மறுநாள் சென்னையில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்லில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இண்டர்வியூ இன்று தொடங்கிய நிலையில் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து இப்போது தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Mega Walkin Drive for Freshers என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ இன்று தொடங்கி உள்ளது. இந்த இண்டர்வியூ நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களிலும் நடைபெற உள்ளது.

hcl-tech-walkin-drive-for-freshers-27-may-to-29-may

இந்த இண்டர்வியூவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அமெரிக்கா ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

முதல் நாள் இண்டர்வியூ இன்று முடிவடைந்த நிலையில் நாளை, நாளை மறுநாள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களுக்கும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 3 - HCL Navalur - Block 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu, 600130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூர் மற்றும் நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛கிரேட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி கட்ட இண்டர்வியூவில் சம்பளம் பற்றி தெரிவிக்கப்படும்.

பணியில் சேர்வோருக்கு அலுவலகத்தில் இருந்து 30 கிமீ தொலைவிற்கு Cab வசதி வழங்கப்படும். பெண் பணியாளர்களுக்கு இது இலவசமாகும். இண்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி என்பது வழங்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+