எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. பிப் 24 - 26ம் தேதி வரை இண்டர்வியூ.. அம்பத்தூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பிப்ரவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. நம் நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs jobs job

இந்த நிறுவனம் இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்ற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் Experienced Voice for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும்.

Voice Process பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மல்டி டாஸ்கிங் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்லும்போதும் தற்போது முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துக்கான ஆஃபர் லெட்டர், சம்பள ரசீது, ரிலீவிங் கடிதம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் இந்த Cab வசதி இருக்கும். அதேபோல் வாரம் 5 நாட்கள் பணி என்பது இருக்கும். உடனடியாக பணிக்கு சேர தயாராக இருப்போருக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+