மதுரையில் ஐடி வேலை.. HCL தரும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.. பிப்ரவரி 8ல் இண்டர்வியூ
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 8 ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் உள்ளது.

எச்சிஎல் சார்பில் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் டிகிரியை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு Oracle PLSQL, SAP ABAP தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி பணியில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 24 மாதம் (2 ஆண்டு) வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப்பில் பணி செய்தது என்பது அனுபவமாக எடுத்து கொள்ளப்படாது. அதேபோல் 2 ஆண்டை விட கூடுதல் வருட பணி அனுபவம் கொண்டவர்களும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 8 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மதுரையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
அதாவது HCL Tech, ElCOT IT Park, Airport, maatuthavani Ring Road, Near pandi Kovil, Madurai என்ற முகவரியில் வைத்து தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ம் தேதி அங்கு முன்கூட்டியே செல்வது நல்லது. இண்டர்வியூ என்பது மொத்தம் 2 ரவுண்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ரவுண்ட் என்பது ஆன்லைன் டெக்னிக்கல் அசஸ்மென்ட் (ஹேக்கர் ரேங்க்), 2வது ரவுண்ட் என்பது டெக்னிக்கல் மேனஜிரியல் டிஸ்கஷன் முறையில் இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மதுரை எச்சிஎல் நிறுவனத்தின் இண்டர்வியூவில் பிப்ரவரி 8 ம் தேதி பங்கேற்று பயன்பெறலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications