அரியர்ஸ் இருந்தாலும் ‛ஜாப்' ரெடி.. டிச.,22 -23ல் சென்னை எச்சிஎல்-யில் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 23 என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Banking Domain பிரிவில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-களுக்கான பணியாகும். எனவே முன் அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பம் செய்வோர் கல்லூரியில் UG, PG முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேபோல் கல்லூரி படிப்பில் அரியர்ஸ் இருப்பவர்களும் பங்கேற்கலாம். PG டிகிரிஎன்று எடுத்து கொண்டால் 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு ரெடியாக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. இன்டர்நேரஷனல் டிரெய்னஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 22, டிசம்பர் 23 என 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies- AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, ThiruvallurHigh Road, Ambattur என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்நல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சோழிங்நல்லூரில் HCl Elcot Economic Zone, Medavakkam High Road, Sholinganallur - 600 119 என்ற முகவரியில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் ஊழியர்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications