நாளை காலை 9.30 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. டிகிரி முடித்தோரை அழைக்கும் HCL
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ்ஸில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது US Healthcare Voice ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக 2024 முதல் 2026ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
அதேவேளையில் பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள் என்றால் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம். டிகிரி முடித்தோருக்கு மட்டுமே சான்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நன்றாக கவனிக்கும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் மல்டி டாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும். டீமாக சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 12ம் தேதி (நாளை)காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA -Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சோழிங்கநல்லூர், நாவலூரில் உள்ள அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதுது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
