HCL நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. ஜனவரி 31ல் சென்னை உள்பட 2 இடங்களில் இண்டர்வியூ
சென்னை: சென்னை மற்றும் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜனவரி 31ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் GCP Lead DevOps Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு GCP சர்வீசில் நல்லஅறிவு வேண்டும். குறிப்பாக Compute Engine, Kubernetes Engine, Cloud Storage, Cloud Functions Pub/su, Big Query தெரிந்திருக்க வண்டும்.
பைத்தான் தெரிய வேண்டும்
அதேபோல் Terraform, Ansible, ஸ்கிரிப்ட்டிங் லேங்குவேஜான Python, Bash தெரிந்திருக்க வேண்டும். APIGatewas, API Security Standards (OAuth 2.0, JWT) அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் CI/CD (Jenins - CI, Harness - CD Preferred) tools and Pactices உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
5 ஆண்டு அனுபவம்
மேலும் Containerization (Docker) தெரிந்திருப்பதோடு, கூகுள் குளவுட் புரோபஷனல் கிளவுட் ஆர்க்கிடெக்ட் அல்லது அசோசியேட் கிளவுட் இன்ஜினியர் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜிசிபி போக்கஸ் கிளவுட் இன்ஜினியரிங்கில் REX-ல் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஜனவரி 31ல் இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்படும். தற்போதைய அறிவிப்பில் பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சென்னை, ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications