English தெரியுமா? HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. சென்னையில் நவ., 20, 21, 22ல் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னை அம்பத்தூரில் உள்ள அலுவலகத்தில் நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது International Banking Voice Process பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த பிரிவில் அசோசியேட்/அனலிஸ்ட் பொறுப்பில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்கள் Inbound Calling Process-யில் பணியாற்றுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர்10, பிளஸ் 2-வை தொடர்ந்து ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் இருக்க வேண்டும். அதேபோல் டீமாகவும், தனி ஆளாகவும், ரிசல்ட்டை கொடுக்கும் வல்லமை இருக்க வேண்டும்.
கிளைன்ட்டின் கேள்விகளுக்கு வாய்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் தீர்வு வழங்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரவில் 1-3 ஆண்டு வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணியை வீட்டில் இருந்து செய்யவோ அல்லது ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் வாய்ப்பு கிடையாது.
நேரடியாக அலுவலகம் வந்து தான் பணியாற்ற வேண்டும். தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 தினங்களில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, 104-8, sai nagar, ambattur industrial estate, chennai, tamil nadu 600 076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications