பிளஸ் 2 முடித்தவருக்கு ஐடி வேலை.. இன்று முதல் 3 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL-ல் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ இன்று (ஜனவரி 22) முதல் ஜனவரி 24ம் தேதி (நாளை மறுநாள்) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. பிளஸ் 2 அல்லது டிகிரி, பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-லில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்ற அந்த வகையில் தற்போது International Banking Voice Process பிரிவில் Associates/Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு Inbound Calling இருக்கும். அதேவேளையில் சேல்ஸ், அப்செல்லிங், கிராஸ் செல்லிங் இருக்காது. இந்த பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். அதேபோல் டிகிரி, பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டிடாஸ்க் மற்றும் டீமாகவும், தனிப்பட்ட நபராகவும் செயல்பட்டு உரிய நேரத்தில் ரிசல்ட் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். புராடெக்ட், சர்வீஸ், டேட்டா மற்றும் கிளைன்ட் அக்கவுண்ட் சார்ந்த கேள்விளுக்கு வாய்ஸ் மற்றும் ரிட்டர்ன் முறையில் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்.
மேலும், அசோசியேட் பணியை விரும்புவோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை இன்டர்நேரஷனல் வாய்ஸ் புராசஸ் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் அனலிஸ்ட் பணியை விரும்புவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின் படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ இன்று (ஜனவரி 22), நாளை (ஜனவரி 23), நாளை மறுநாள் (ஜனவரி 24) என 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த 3 நாட்களும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies LTd, ETA 1, No 33, Block 1, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்ய்பபட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications