B.sc, B.com, BBA படித்தோருக்கு ஐடி வேலை.. அழைக்கும் HCL.. செப்டம்பர் 12ல் சென்னையில் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தோருக்கு என்று பிரத்யேகமான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 12ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்ஏஎல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் அங்கேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இப்போது Process Associate (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பின்வருமாறு: புராசஸ் அசோசியேட்(வாய்ஸ் புராசஸ்) பணிக்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருந்தால் சிறப்பு. குறிப்பாக பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். ஆனால் விண்ணப்பத்தாரர்களுக்கு அரியர்ஸ் இருக்க கூடாது.
மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அலுவலகம் வந்து பணியாற்ற தயாராக வேண்டும். அதேபோல் விண்ணப்பத்தாரர்களுக்கு இன்டர்நேஷனல் பிபிஓ-வில் ஓராண்டு வரை வாய்ஸ் புராசஸ் அல்லது இமெயில் சாட் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாகும். வேறு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் என்றால் ரிலிவிங் கடிதம் அல்லது ராஜினாமா கடிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். வேலை என்பது US Shift முறையில் இருக்கும். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். ஊழியர்களுக்கு Cab வசதி உண்டு.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 12ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Tower 4, Elcot Sez, Sholinganallur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்திலேயே நியமனம் செய்ப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications