4 பிரிவுகளில் வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 8 ல் சென்னையில் இண்டர்வியூ.. வாய்ப்பு தரும் HCL ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனம் சார்பில் பிப்ரவரி 8 ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய வேலைவாய்ப்பு குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:

it jobs job jobs

எச்சிஎல் நிறுவனம் சார்பில் தற்போது டர்போ மெஷினரி ஃபீல்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டிசைன் இன்ஜினியர் (Turbomachinery Field Instrumentation Design Engineer)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் லீட், டெக்னிக்கல் லீட், சீனியர் டெக்னிக்கல் லீட், மேனஜர் உள்ளிட்ட பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

குறிப்பாக டர்போமெஷினரி அல்லது இன்டஸ்ட்ரி புராஜெக்ட்க்கான இன்ஸ்ட்ரூமென்டேஷன் டிசைனில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஐஇசி, ஐஎஸ்ஏ, ஏபிஐ உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை மற்றும் டாக்குமென்டேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 15 ஆண்டு பணி அனுபவத்துடன் இருக்க வேண்டும். பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் பிப்ரவரி 8 ம் தேதி காலை 9.30 மணி முதல் 4 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 8 ம் தேதி காலையில் SEZ Unit-1-Shollinganallur - Elcot - SEZ Unit -I, New Cafeteria 2nd floor, Shollinganallur, Medavakkam High Road, Sholinganallur, Chennai - 600119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+