ஆங்கிலத்தில் பேசினால் போதும்.. எச்சிஎல் நிறுவனத்தில் அக்டோபர் 11ல் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் அக்டோபர் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு இண்டர்வியூ நடைபெற உள்ளது. இநு்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் (International Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் போன் மூலமாக கஸ்டமர் சர்வீஸ் சப்போர்ட் - கலெக்சன் சார்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிந்திருக்க வேண்டும். நன்கு கவனிக்கும் திறமை இருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் திறமை இருக்க வேண்டும்.
மல்டி டாஸ்க்கிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். டீம் பிளேயராக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 4 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுபவத்தில் குறைந்தபட்சம் ஏஆர் காலிங் பிரிவில் ஓராண்டு வரை பணி செய்திருக்க வேண்டும். அதேபோல் இன்பவுண்ட் / அவுட்பவுண்ட் பிரிவில் பணியாற்றியவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பிரிவில் பணியாற்றி இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். பணி என்பது US Shift முறையில் இருக்கும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 11ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Tech, SEZ Tower 4, 138, 602/3, Medavakkam High Road, Elcot Sez, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications